' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Sunday, April 15, 2012

நாம் எதிர்பார்த்தது இதோ !!

சில மாதங்களுக்கு முன் 'பரோட்டா விசயமாக ' ஒரு தகவல் வலைபதிவு, FACE BOOK மூலம் பரவியது நாம் அறிந்ததே.  நம் தளத்தில் கூட பதிவு செய்யப்பட்டது. அதில் நாம் கூட ஒரு விருப்பம் தெரிவித்திருந்தோம், "யாரேனும் நம்மவர்களுக்கு ஏற்ற வகையில் தற்கால சூழலுக்கு தகுந்த வகையில் சமையல் குறிப்புகள் தர முடியுமா? என்று" . 

சென்னை திருமதி ஆர். கிருஷ்ணவேணி அரங்கநாதன் அவர்கள் சமையல் மட்டுமின்றி மருந்து மற்றும் சில இல்லத்திற்கு தேவையான குறிப்புகளையும் கலந்து ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார்கள். மேற்கண்ட புத்தகத்தை பற்றி சென்னையில் ஒரு வளைகாப்பு விழாவில் திருமதி ஆர். கிருஷ்ணவேணி அவர்களை நாலாட்டின்புத்தூர் திருமதி மீனா தேவர்பிரான் சந்தித்து பேசிய பொழுது அறிய வந்தது.

பல வகையான சாத வகைகள், குழம்பு, கூட்டு கறி வகைகள், சப்பாத்தி சப்ஜி வகைகள், இட்லி தோசை வகைகள், பொடி சட்னி வகைகள் , ஊறுகாய் வற்றல் வகைகள், பலகார வகைகள் , எளிய மருத்துவக் குறிப்புகள் , பொதுவான குறிப்புகள் பல இப்புத்தகத்தில் தன்னுடைய அனுபவத்தின் மூலமாக இடம்பெற வைத்துள்ளார்கள். 



25 க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகளைத் தந்துள்ளார்கள்.  நம்மவர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் அனைவரும் இதனை உபயோகித்துக்கொண்டால் நாம் மருத்துவத்திற்கென செலவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்பது எனது கருத்து.  மேலும் வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது திண்ணம்.

 இப்புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி .

திருமதி ஆர். கிருஷ்ணவேணி , 
யசோதா இல்லம், 
1 /11 , 17  வது தெரு,
தில்லை கங்கா நகர் ,
சென்னை - 600  061 .

புத்தகத்தின் விலை ரூபாய் 70 .00 மட்டுமே. 

நம் அனைவரின் இல்லம்தோரும் இருக்க வேண்டிய ஒரு பெட்டகம். 

 

No comments:

Post a Comment