' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, December 29, 2011

இறைவன் கேட்கும் புத்தாண்டு உறுதி மொழி

OPS Digital Office, USA விலிருந்து வந்த புத்தாண்டு வாழ்த்துக் கவிதை இதோ...
 
Below is Tagore's poem translated in Tamil by Dr. Lakshman and he has given a lovely title "God's request as New Year Resolution".  (Not sure whether Tagore wrote in English or it was translated to English).

மலரெடுத்து எனக்கு அர்ச்சனை வேண்டாம்!
 
மலரென்ன மாசில்லா மனமே வேண்டும்!
 
ஒளி காட்டி உருகும் மெழுகு, தீபங்கள் வேண்டாம்!
 
ஒளியில் உள்ளத்தில் இருள் அகற்ற வேண்டும்!
 
தலை தாழ்ந்து மந்திரங்கள் சொலிட வேண்டாம்!
 
தலைகணம் இல்லாமல் இருந்திட வேண்டும்!
 
தாள்வீழ்து தானுயர பிரார்த்தனை வேண்டாம்!
 
கீழிருப்போர் மேல் உயர உதவிட வேண்டும்!
 
பாவங்கள் ஒழித்திட யாகங்கள் வேண்டாம்!
 
பாவிகளை ரட்சிக்கும் தியாகம் வேண்டும்!
 
உன்னுள் உத்தமனை உணர்த்திடுவாய்!
 
என்னை நீ புரிந்திடுவாய்!
 
- தாகூர்

















Wednesday, December 28, 2011

இரண்டாம் ஆண்டு விழா

கோவில்பட்டி சங்க இரண்டாம் ஆண்டு விழாவின் போது எடுக்கப்பட்ட சில  போட்டோக்களை செல்வன் கார்த்திகேயன்  அனுப்பியுள்ளார். மற்றும் பதிவு செய்யப்பட்ட விடியோக்களில் (கார்த்திகேயனால் பதிவு செய்யப்பட்டது) சிலவற்றின் லிங்க் (Youtube Link) கீழே தரப்பட்டுள்ளது. பார்த்தவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.





 மேலும் அனுப்புவதாக தெரிவித்துள்ளார் கார்த்திகேயன். 
அவருக்கு நன்றி.

 

இரண்டாம் ஆண்டு விழா

இரண்டாம் ஆண்டு விழா 25.12.2011

கோவில்பட்டி சங்க பொது குழு கூட்டமும் ஆண்டு விழாவும் 25.12.2011 அன்று கோவில்பட்டி சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் வைத்து செல்வி M.லட்சுமி இறை வணக்கத்துடன் காலை 10 மணிக்கு தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் பொதுக்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. செயலாளர் திரு தெய்வநாயகம் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். திரு செண்பகசுந்தரம் அவர்கள் 2011 ம் ஆண்டு வரவு, செலவு வாசித்து மன்ற ஒப்புதல் பெற்றார். நமது சங்க பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்களின் மகள் ஸ்ரீவரமங்கைநாச்சியாரின் கணவர் திரு சீனிவாசன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆண்டு விழா
மதுரை முன்னாள் தலைவர் திரு L.திருவடி அவர்கள் தலைமையில் செல்வி N.விசாஹினி பாரத நாட்டியத்துடன் ஆண்டு விழா ஆரம்பமானது. 
தலைவர் திரு தேவர்பிரான் அனைவரையும் வரவேற்று பேசினார் .
திரு L.திருவடி அவர்கள் சங்க வளர்ச்சி பற்றி பேசினார்கள். 
கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் திரு ல.செந்தூர் நாதன் அவர்கள் 
ஒ. ப. சீ யின் பழக்க வழக்கங்கள் பற்றி விரிவாக விவரித்தார்கள்.  கூட்டமைப்பு உதவி தலைவர் திரு A.பாலசுப்ரமணியன் அவர்கள் கோவில்பட்டி சங்க நடவடிக்கைகள் பற்றி பாராட்டி பேசினார்கள்.  கோவை சங்க தலைவர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள், செயலாளர் M.R.திருவடி அவர்கள், மதுரை சங்க செயலாளர் திரு ச.சுப்பிரமணியன் , விக்கிரமசிங்கபுரம் தலைவி திருமதி சங்கரபார்வதி, திருமதி கல்யாணி அவர்கள் வாழ்த்தி பேசியும், தேவாரம் பாடியும் மகிழ்வித்தார்கள். திரு குருநாதன் அவர்கள் பதவி உயர்வு பெற்றதை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. தலைவர் மற்றும் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக  நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. மதுரை திரு L.திருவடி அவர்கள் விழாவுக்காக ரூ 1000/- வழங்கி கொடுத்து உதவியுள்ளார்கள். அவர்களுக்கு கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டைப்போல் சங்க நிர்வாகிகளைப் பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. 

மதிய உணவிற்குப் பின் பல்சுவை நிகழ்ச்சிகள் திரு பாலசுப்ரமணியன், திரு சுப்ரமணியன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 
திருநெல்வேலி திரு விஸ்வநாதன் - வள்ளி மயில் தம்பதியினரின் புதல்வி செல்வி பூரணி என்ற ராமலட்சுமி யின் பாரத நாட்டியத்துடன் ஆரம்பமானது. செல்வி N.தேவிகா, செல்வன் L.சுரேஷ்  திருக்குறள் ஒப்புவித்தார்கள். 
செல்வி N.தேவிகா , செல்வி N. விசாஹினி ,செல்வி நீலவேணி, செல்வன் முனீஸ் ஆகியோர் பாடல்கள் பாடி இனிமைப்படுத்தினார்கள். 
செல்வன் எஸ்.காந்தி பூவனாதன், செல்வி சூரிய காந்தி, செல்வன் எஸ்.முநீஸ்குமார், செல்வன் எஸ்.பிரமநாயகம், செல்வன் வி.செண்பகசுந்தரம் , செல்வன் வி.வெங்கடேஷ்பாரதி  ஆகியோர் தாங்கள் இயற்றிய கவிதைகளைப் பாடி தமிழ் புலமையினை வெளிப்படுத்தினார்கள். 

தொடரும் ..


Saturday, December 17, 2011

உடுமலைபேட்டை சங்க செய்திகள்

உடுமலைபேட்டை சங்க கூட்டம் 20.11.2011 ஞாயிறு அன்று மடத்துக்குளம் திரு சுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில்  மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இறைவணக்கம் திரு பாடகலிங்கம் அவர்களால் பாடப்பட்டது. 
மறைந்த நம் இனப் பெருமக்களுக்கு இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
தலைவர் திரு பட்சிராஜன் தனது முன்னுரையில் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் கல்வி உதவித்தொகை பெற்றது குறித்தும் அறக்கட்டளை குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்கள்.
ஆகஸ்ட் மாத சங்க அறிக்கையை செயலாளர் திரு கோபிநாதன் அவர்கள் சமர்ப்பித்தார்கள் . சங்கம் அதனை ஏற்றுக்கொண்டது. 
பொருளாளர் திரு சண்முகநாதன் சங்கத்தின் வரவு-செலவு கணக்கினை தாக்கல் செய்ய , அனைவராலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
கோவை சண்முகசுந்தரம் அவர்களின் மகன் விகாஸ் நாராயணன் வைத்திய செலவிற்கு நமது சங்க செயலாளர் திரு சண்முகநாதன் அவர்கள் ரூபாய் 500/- வழங்கியமைக்கு கோவை சங்கம் பதிவு செய்த நன்றியினை எடுத்துக்காட்டி நமது சங்கம் பாராட்டினைத் தெரிவித்துகொண்டது. 
கோவில்பட்டி சங்கம் இணைய தளம் ஏற்படுத்திகொடுத்ததிற்கு நமது சங்கம் பாராட்டுதலைப் பதிவு செய்தது. 
கோவில்பட்டி இணையதளத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டு நம்முடைய உதவி செயலாளர் திரு ராமானுஜம் - ரமா அவர்களின் புதல்வன் செல்வன் பவித்திரன் முதல் இடம் பெற்றமைக்கு நமது சங்கத்தின் சார்பாக பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.
திரு பாடகலிங்கம்பிள்ளை - கோதையம்மாள் தம்பதியினரின் 50 வது திருமண பொன்விழா 2.11.11 புதனன்று அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக நடத்தி பொன் விழா தம்பதியினரிடம் ஆசி பெற்றுக் கொண்டார்கள். மேலும்பொன் விழா நினைவாக உடுமலை சங்கத்தில் ஒரு அறக்கட்டளை துவங்க ரூபாய் 5000 /-  வழங்குவதாக அறிவித்தார்கள். இதற்கு சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

1. சென்னை கூட்டமைப்பில் இருந்து கல்வி உதவித்தொகை தொழில் சார்ந்த கல்விக்கு மட்டும் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்கம் வழங்குவது போல் மற்ற பட்டம், பட்டய துறைகளுக்கும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

2. நம் இனப் பெருமக்களில் மிகவும் நலிந்த குடும்பத்தில் உள்ள நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு மேற்படிப்பு படிக்க வைக்க முடியாத மாணவ / மாணவியர்க்கு உயர்ந்த நிலையில் உள்ள நம் இனப் பெருமக்கள் தத்து எடுத்து அவர்களின் படிப்பு செலவினை ஏற்று படிக்க வைக்க வேண்டுகிறோம்.

2011  - 2012 ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை 
DAP டிரஸ்ட் ரூ 5000
திலி கல்வி அபிவிருத்தி சங்கம் ரூ 14100 
சென்னை கூட்டமைப்பு  ரூ 13000
மொத்தம் ரூ 32100
மேற்கண்ட கல்வி உதவிகளைச் செய்தமைக்கு உடுமலை சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்ளப்பட்டது. 

செய்தி அளித்தவர் உடுமலை தலைவர் திரு V.S. பட்சிராஜன் அவர்கள்

கவிதை அற்புதம்

மதுரை வைஷ்ணவி கார்த்திகேயன் (கணேசன் சரஸ்வதி) அவர்களின் 3 கவிதைகளும் அற்புதம். அவர்தம் கவிதை மென்மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். அவரது கவிதையை பிரசுரித்த தாங்களும் வளர்க.

Regards
M.R.S.
m.ramasubramanian, Coimbatore

கோவை சங்க செய்திகள்

282வது கூட்டம் திரு.ப.ராஜா ஆறுமுகம் த/பெ டாக்டர் பி.எஸ்.பழனியப்பன், 792, பூங்கா நகர், கோவை - 14 என்ற இல்லத்தில் 11/12/11 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.

இறைவணக்கம் திருமதி கோமதி கல்யாணசுந்தரம் அவர்களால் பாடப்பட்டது.


தலைவர் திரு. பா.கல்யாணசுந்தரம் தமது உரையில் கூட்டம் சிறப்பாக நடக்கவும், இன்னும் அதிக உறுப்பினர்கள் அதிக ஆர்வத்துடன் வரவும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறி எல்லோரையும் வரவேற்று பேசினார்.


நீத்தார் அஞ்சலி:


இக்கூட்டத்தில் கீழ்கணட மறைந்த நபர்களுக்கு 2 நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டு அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்திக்கப்பட்டது.


1) கொல்கத்தா மருத்துவமனையில் அகால மரணம் அடைந்த 92 நபர்களுக்கு;


2) ஒ.பி.எஸ். கூட்டமைப்பு பொருளாளர் திரு.குருபாதம் அவர்களின் புதல்வர் திரு. ராஜேந்திர குமார்;


3) கோவை ஒ.பி.எஸ். செயற்குழு உறுப்பினரும், தமிழக அரசு ஒய்வு பெற்ற அலுவலர் கோவைபுதூர் கிளை சங்கத்தின் தலைவருமான திரு கி.வரதராஜன்;


4) திரு.திரவியம் ராஜப்பா-திருமதி சரோஜா அவர்களின் மகளும், திரு.சுப்பிரமணியத்தின் மனைவியுமான திருமதி சு.லதா;


5) வடவள்ளி திரு.நாகராஜன்


கடந்த மாத அறிக்கையும், வரவு செலவு அறிக்கையும் பொது செயலாளர் திரு.எம்.ஆர்.திருவடி அவர்களால் வாசிக்கப்பட்டு, அது உறுப்பிணர்களின் கரகோஷ்த்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கீழ்கண்ட நபர்கள் புதிய செயற்குழு உறுப்பிணர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள:


1) திரு.வி.கணேசன், கோவைபுதூர்

2) திரு.ந.வீரக்குமார், பி.எல்,எஸ். நகர்
3) திரு.ச.அய்யப்பன், வடவள்ளி
4) திரு.எஸ்.எஸ்.மணி, வடவள்ளி
5) திரு.எஸ்.கணபதி@குகன், சுண்டக்காமுத்தூர்
6) திரு.மு.இராமசுப்பிரமணியன், பாலாஜி நகர்
7) திருமதி மகாலட்சுமி ஆழ்வாரப்பன், இராமநாதபுரம்

மருத்துவ உதவி கோரிக்கை:


மறைநத கோவை கணபதி சுப்பிரமணியனின் மருமகனும் திருமதி அ.சண்முகவடிவின் கணவர் திரு.வி.அருணகிரி அவர்கள் சர்க்கரை நோயால் மிகவும் அல்லலுற்று கோவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்த்தும் பூரண குணமடையாததால், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவரது வலது கால் மூட்டிற்கு மேல் (தொடை வரை) அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுவிட்டது. அவரின் விண்ணப்பத்தின் பேரில் கோவை சங்கம் அதனை பரீசிலித்து ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி தொகையாக கொடுப்பது எனவும் மேலும் உறுப்பினர்கள் ஆதரவோடு நன்கொடை வசூலித்து அவருக்கு அளிப்பது எனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.


இக்கூட்டத்தில் உறுப்பிணர்கள், திரு அருணகிரி அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க, தலைமை சங்கம் மற்றும் கிளை சங்களை நாடுமாறு கோவை ஒ.பி,எஸ் சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொணடார்கள்.


பாரதியார் பிறந்த நாள்:


சங்கத்தின் ஆலோசகர் திரு எஸ்.வெங்கிடராமன் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு வந்திருந்த குழந்தைககளிடம் பாடச்சொன்னபோது, செயற்குழு உறுப்பினர் திரு.கோ,சீனிவாசனின் பேரனும், திரு.அருணாசலம்-திருமதி பட்சியம்மாள் புதல்வன் செல்வன் அ.கிரிதரன் (ஜீ.ஆர்.ஜீ மெட்ரிகுலேஷன் பள்ளியில் யு.கே.ஜி மாணவன்) மிக அருமையாக பாரதியார் பாடலை பாடி உறுப்பினர்களின் பாராட்டுதலை பெற்றார், இதே போன்று எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லா குழந்தைகளையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் திரு.எஸ்.வெங்கிடராமன் வலியுறுத்தினார்.


மேலும் திரு.எஸ்.வெங்க்கிடராமன் அவர்கள் தனது உரையில், "கோவை ஈச்சனாரி பிள்ளயார் கோவில் அருகில், செட்டிபாளையம் சாலையில் சைவ சமுகத்தை சார்ந்தவர் கட்டியிருக்கும் திருமண மண்டப்பத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் மார்பு அளவு உருவச்சிலையை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களால் 20/11/2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. அவ்விழாவில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சியின் புதல்வன் திரு.வாலேஸ்வரன் (80 வயதுக்கு மேல்) கலந்து கொண்டு தனது தந்தையாரின் சிறப்புககளை எடுத்துரைத்தார்" என்பதனை மேற்கோள் காட்டி உரையாற்றினார்,


வடவள்ளி திரு.உ, மீனாட்சிசுந்தரமும், கோவைபுதூர் திரு. வி.கணேசனும் வந்திருந்த உறுப்பிணர்களிடம் தலா ரூபாய் 2 வீதம் வசூல் செய்து அதனை குலுக்கல் மூலம் வெற்றி இருவருக்கு 50%, சங்கத்திற்கு 50% பகிர்ந்து அளிப்பது எனவும் முடிவு செய்ததில், உறுப்பினர்கள் திரு.க.இலட்சுமணன், திருமதி ச.கோமதி ஆகிய இருவரும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தை கோவை சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தார்கள்.


இறுதியாக உறுப்பினர் திரு.மு.இராமசுப்பிரமணியன் அவர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருநத உறுப்பினர்களுக்கும், கூட்டம் நடத்துவதற்கு இடமும், மிக சிறப்பான மதிய உண்விற்கும் தக்க ஏற்பாடுகள் செய்த திரு.ப்.இராஜா ஆறுமுகம்-திருமதி இரா.சங்கர கோமதி இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து தனது உரையினை முடித்தார்.


பா.கல்யாணசுந்தரம்                                     ம.இரா. திருவடி

                              
தலைவர்  
                                                         பொது செயலாளர்
செய்தி அளித்தவர்  திரு M.R.S. , கோவை

Thursday, December 8, 2011

கவிதை

 
காதலித்து கைபிடித்த தன் கணவனிடம்  கூறியது:
"என்னை மட்டுமே ரசித்த
உன் கண்கள்"

இன்று,(கல்யாணம் முடித்த பின்)

எதர்ச்சியாக மற்ற,
"அழகான பெண்களை
பார்க்க
நேரிட போதும் கூட
அதை ஏற்க மறுக்கிறது
என் மனம்".

பொறாமையில் அல்ல;

உன்
"ஒரு 'நொடி பார்வை'
அவளை,
'உலக அழகி' என்று நினைக்க வைக்கும்."

அதில் "மதிமயங்கிவள்

தானே!"
உன்னுடன்,
இப்போது "கல்யாணம் முடித்து"
கைகோர்த்து எங்கும்
உலா வருகிறேன்(ஊர் சுற்றுகிறேன்.:))
எல்லையில்லா மகிழ்ச்சியோடு,
உன்னை மட்டுமே நெஞ்சில் சுமந்து!

அத்துணை "காந்த சக்தி நிறைந்த

உன் பார்வையில்",
"முதலும் கடைசியாக" நானே
இருக்க விரும்புகிறேன். 

K.Vaishnavikarthikeyan(Ganesan saraswathi)madurai

Sunday, December 4, 2011

கவிதை

 
"தோல்வி!...
மீது,கவனம் செலுத்தினால்!..
'வெற்றி'நம்,
கூடவே,வரும்".....


"தோல்விக்கே!....
சவால்,விடு!...
'முடிந்தால்' என்னை...
'தோற்க்கடித்து' பார்,என்று"....

"நீ!....

உன்னை,பலமுள்ளவனாக!...
எண்ணினால்....
நீ!...
பலமுள்ளவனாக,ஆவாய்"....

"சிந்திப்பதற்கு.....
சோம்பல் படுகிறவர்கள் தான்!...
'புத்தகம்' படிப்பார்கள்"....

"கோபம் என்பது...
பிறர்,செய்யும்...
தவறுக்கு!...
நமக்கு,நாமே...
கொடுத்துக்கொள்ளும்,
தண்டனை!....

"அன்பு...
உங்களின்...
பலவீனம்!,என்றால்...
இந்த உலகத்தில் சிறந்த..
பலசாலி!....
நீங்கள் தான்".....



வாழ்கையில்....

நீ!....சந்திக்கும் ஒவ்வொரு, மனிதனும் உனக்கு,
"குரு"!...
அவனிடம் நீ!... கற்றுக்கொள்ள வேண்டியது,
ஏதாவது ஒன்று இருக்கம்!...

நம்பிக்கயை!....
இழக்கும் வரை...
தோல்விகள்!,...
நம்மை, நெருங்குவதில்லை!......


"உள்ளங்களில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்!..
பழகியதன், விளைவுகளை!..
நான்..
துன்பம் வந்த போது தான்,,
தெரிந்துகொண்டேன்!...."

"நம்பிக்கை, என்னும் மலையில்!...
முயற்சி, என்னும் கயிறு கொண்டு, ஏறினால்தான்!...
வெற்றி என்னும் சிகரத்தை அட.....

K.Vaishnavikarthikeyan(Ganesan saraswathi)madurai


Saturday, December 3, 2011

கவிதை


"வேண்டியதை பேசி........

வேண்டாததை வேலெடுத்து வெட்டி வீழ்த்துவோம்.....

வேகம் கொள்ளும் வயதிலும் விவேகமாய் .......

வேரூன்றி நிற்ப்போம் நண்பர்களாய்........

இப்பாரினிலே!"

மதம் மொழி இனம் நட்பு காதல் ஆண் பெண்
இவற்றுக்கு அப்பாற்பட்டது
"அன்பு"
அன்புக்கு ஈடுஇணை எதுவும் இல்லை இந்த பிரபஞ்சத்தில்

வாருங்கள் என் அருமை சகோதர சகோதரிகளே
ஜாதி மதம் இனவெறி இவற்றால் மாசுபடிந்துருக்கும்
இந்த உலகத்தை அன்பால் துய்மை படுத்துவோம்
நான் நீ என்று இல்லாமல் "நாம்" ஆக இருப்போம்

மனித வாழ்வின் சாரமான
உண்மை! சுதந்திரம்! ஆனந்தம்! அறிவு! அழகு!
என்ற குணங்களை நன்கு ஒளிர செய்வது
"அன்பே"
உண்மையான அன்பு என்பது
அக்கினியைப் போன்று திவ்யமான பொருள்,
தியாகமின்றி,
அகங்காரத்தை மறந்தாலன்றி,
உள்ளதை உள்ளம் உணர்ந்தாலன்றி
உண்மையான அன்பு செலுத்த முடியாது!

பிறக்கும் போதும் பேரில்லை!
இறக்கும் போதும் பேரில்லை!
இடையில் தானே குழப்பங்கள்!
வாழ்கையோடு வழக்குகள்!
ஜெயிக்க போகும் மானிடா!
மயக்கம் இங்கே ஏனடா!
உறுதியோடு கேளடா!
உண்மை நீயடா!

ராமர், அல்லா, இயேசு பெயர்கள் கூட மூன்றெழுத்து
நாமம், குல்லா, சிலுவை சின்னங்கள் கூட மூன்றெ...............

K.Vaishnavikarthikeyan(Ganesan saraswathi)madurai

Tuesday, November 29, 2011

OPS Digital Office at US

Ops family mail.opsfamily@gmail.com has invited you to join the opsfamily
group with this message:

Vanakkam,

Please accept and join this group so that you'll automatically be updated
with the OPS Communication and other discussion happening withing the OPS
Community.

If you have any questions, feel free to contact any one of the following.

1. Karthik - Cell: 732.692.4016
2. Sudarshan - Cell: 732.309.5853








Here is the group's description:

This is a group to connect the families belonging to the OPS community

---------------------- Google Groups Information ----------------------

You can accept this invitation by clicking the following URL:

http://groups.google.com/group/opsfamily/sub?s=pBVpDBQAAABPQvu6-73hiycQ73HP70dhBAMt63rLoCxr-bvccETqww&hl=en


--------------------- If This Message Is Unwanted ---------------------

If you feel that this message is abuse, please inform the Google Groups staff
by using the URL below.

http://groups.google.com/groups/abuse?invite=YgAAAPm1sw1lAAAAz2nfHn4AAAAAAEbxk8BXa6HqIAWHsy49AwR0Zu8&hl=en

Anbudan,
OPS Digital Office

கவிதை

  அம்மா
  அம்மா 
 
உன்னை பாட நான் வார்த்தை எங்கு தேடுவேன்,,,,,,,,,,
 
நான் பேசும் வார்த்தைக்கு இலக்கணம் நீயம்மா,,,,,,,,,,

 உன் தியாகங்களை நான் வெல்ல முடியுமா,,,,,,,
 
இவ்வுலகில் என்னை தோன்ற வைத்தாயே,,,,,,,
 
நீ கடவுளின் உருவமம்மா ,,,,,,,,,,,
 
உன் அன்பை விட பெரியது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை,,,,,,,,,
 
உன்னைவிட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல,,,,,,
 
அம்மா என்றும் எனக்கு நீயே வேண்டும்,,,,,,,,,,,
 
எத்தனை கோடி  ஜென்மம் வந்தாலும்,,,,,,
 
உன் வயிற்றில் நான் உதிக்க வேண்டும்,,,,,,,,,,

அம்மா உன்னிடத்தில் நன்றி சொல்ல எனக்கு
வார்த்தை இல்லை,,,,,,,
 
உன் உயிர் ஜீவன் நானம்மா ,,,,,,,,,
 
என்றும் என் பிறவி பலன் உன் சொல்படியே ஆகட்டும் அம்மா,,,,,,,,
 -----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை ஆக்கம் ..
K.வைஷ்ணவி கார்த்திகேயன்
(Daughter in law  of  GANESAN SARASWATHI ) MADURAI.

Saturday, November 26, 2011

நமது வலைதளத்தில் நமது உறவினர்கள் யாரேனும் விலாசம் மற்றும் தொலைபேசி/கைபேசி எண்கள் மாற்றினால் அதனையும் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

Regards
M.R.S.

M.Ramasubramanian, Coimbatore

Wednesday, November 23, 2011

வணக்கம் ,

எனது பாட்டி திருமதி.கோமதி தெய்வநாயகம்,கோவில்பட்டி . வரைந்த கோலம் - கார்த்தி சங்கர்,

மகளிர்க்கான திறமைகள்

வணக்கம் ,

எனது அத்தை திருமதி.மங்கை லோகநாதன் ,கோவில்பட்டி. தீட்டிய கோலம்...., - கார்த்திக் சங்கர். 


வடகரை தெய்வத்திரு தெய்வநாயகம்பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் தெய்வத்திரு எதிராஜ் பிள்ளை ஆகியோரின் பேத்தியும் , கோவில்பட்டி ஜோதிநகர் திரு சங்கர் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி 

S.கீதா  
செமப்புதூர் தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை, கோவில்பட்டி தெய்வத்திரு பாலசுப்ரமணிய பிள்ளை ஆகியோரின் பேரனும் கோவில்பட்டி S.K.முருகன் பிள்ளை அவர்கள் மகன் திருவளர் செல்வன் 
M.சம்பத் குமார்  
இவர்களது திருமண வைபவம் கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி  திருமண மண்டபத்தில் வைத்து 07.11.2011  அன்று சிறப்பாக நடைபெற்றது.

திருமணம்  நிகழ்வுகள் போது எடுக்கப்பட்ட சில படங்கள்,  கலந்து கொள்ள முடியாதவர்களின்  பார்வைக்காக இத் தளத்தில்  தொகுக்கப் பட்டுள்ளன.  
By
Karthikeyan

Sunday, November 20, 2011

நவம்பர் மாதக் கூட்டம்

கோவில்பட்டி சங்க நவம்பர் மாதக் கூட்டம் 09.11.2011 அன்று கோவில்பட்டி சங்க நிர்வாக கமிட்டி உறுப்பினர் திரு ஞானதேசிகன் (ரவி) அவர்கள் மகன் திரு மாணிக்கவாசகம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியன்று கோவில்பட்டி செல்வ மகாலில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் ,பொருளாளர் திரு ரெங்க நாதன் அவர்கள் இறைவணக்கத்துடன் துவங்கியது. 

 மணமக்களை வாழ்த்தி சங்கம் சார்பாக வாழ்த்து மடலும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் புது டில்லி திரு ராஜ்குமார் (விட்டல்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , கோவில்பட்டி சங்க செயல்பாடுகள் பற்றியும் , இணைய தள உபயோகம் பற்றியும் பாராட்டி பேசினார்கள். மேலும் இணைய தளத்தில் வழங்கும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி (Foreign opportunities with Scholarship )செய்திகளை இளைஞர்கள் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

சங்க செயல்கள் பற்றி விவாதிக்கையில் மாணவ மாணவியர்க்கு ஊக்குவிக்கும்படி கட்டுரை, ஓவிய போட்டிகள் ஏற்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து செல்வன் கார்த்தி சங்கர் மற்றும் பொறியாளர் செல்வி சண்முகப்ரியா ஆகியோர் பேசினார்கள்.

சிறப்பு விருந்தினர் திரு ராஜ்குமார் (விட்டல்) அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக திரு நெல்லையப்பன் அவர்களால் பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டது.

இம்மாத  அதிர்ஷ்டசாலி செல்வி சண்முகப்ரியா.

திரு செண்பகசுந்தரம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. 


ஓ ப சீ மாதர் சங்க செய்திகள்

ஓ ப சீ வேளாளர் கல்வி அபிவிருத்தி சங்கம், திருநெல்வேலி - 6 

 ஓ ப சீ மாதர் சங்கம் : திருநெல்வேலி 

                               12.11.2011 அன்று ஓ ப சீ மாதர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், திருநெல்வேலி ,மகாராஜா நகர் ,உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு ஆ. சங்கரசுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் திருமதி , திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து , கூட்டுப் பிரார்த்தனையுடன் திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் அவர்கள் அர்ச்சிக்க , உறுப்பினர்கள் வழிபாடு பாட நடந்தது. மாதர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மாதாந்திர சீட்டு மற்றும் மாதாந்திர குலுக்கல் நடைபெற்று மாதர் சங்கத்திற்கு வழக்கம் போல் நன்கொடை அளித்தனர்.
                                               சமீபத்தில் நடைபெற்ற சதாபிஷேக விழா தம்பதியர் திரு ஆ.சங்கரசுப்ரமணியன் மற்றும் திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் ஆகியோரிடம் கலந்து கொண்ட மாதர்கள் தங்கள்தம் குடும்பத்துடன் வணங்கி ஆசி பெற்றனர். விழா தம்பதியர் ஆசி வழங்கி பரிசுகளும் வழங்கினர். 
                                            சங்கத்தலைவி திருமதி கோதை சங்கரன் அவர்கள், திருமதி & திரு ஆ. சங்கரசுப்ரமணியன் அவர்களுக்கும் , கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி கூறினார். 
                                               அடுத்த மாதாந்திரக் கூட்டம் தலைவி திருமதி கோதை சங்கரன் அவர்கள் இல்லத்தில் 10.12.2011 அன்று நடத்த தீர்மானிக்கலாயிற்று. 

செய்தி அளித்தவர் திருநெல்வேலி திரு செந்தூர் நாதன், 
செயலாளர் ,  
ஓ ப சீ வேளாளர் கல்வி அபிவிருத்தி சங்கம், திருநெல்வேலி அவர்கள்.

பரோட்டா பிரியர்களே உஷார்!

செய்தி அளித்தவர் திரு செந்தூர் நாதன் அவர்கள். அவர்களுக்கு நன்றி. 


நம்மவர்களின் பழக்கவழக்கங்களின் படி உடல் நலம் தரும் காலத்திற்கேற்ற உணவு வகைகளையும், தயாரிக்கும் முறையையும் தெரிவித்தால் அனைவரும் பயன்பெறுவர் (முக்கியமாக இத்தலைமுறையினருக்கு).  எவரேனும் முன்வருவாரா?

Monday, November 14, 2011

திருமண விழா

ஆலங்கிணறு தெய்வத்திரு நா. மாணிக்க வாசகம் பிள்ளை, தெய்வத்திரு மா பட்சியம்மாள் , மதுரை தாசில்தார் தெய்வத்திரு சி.எஸ் . சொக்கலிங்கம்  பிள்ளை - சொ. ராஜம்மாள் ஆகியோரின் பேரனும்,  கோவில்பட்டி  திரு. மா. ஞானதேசிகன், (ரவி),  திருமதி  ஞா. மரகதம் தம்பதியரின்  சிரேஷ்ட புதல்வன்

                             திருவளர் செல்வன்  ஞா. மாணிக்கவாசகம்    B E

கோவை தெய்வதிரு சொ. சுப்ரமணியபிள்ளை, தெய்வத்திரு லோகாம்பாள் அம்மாள், சிங்கை தெய்வத்திரு நெ. கல்யாண சுந்தரம் பிள்ளை, தெய்வத்திரு க கமலாம்பாள் ஆகியோரின் பேத்தியும், சென்னை சு முத்தையா திருமதி மு வள்ளிமயில் தம்பதியரின் புதல்வி

                திருநிறைச்செல்வி மு. கமலகல்யாணி (எ) மாலினி  B E     


இவர்களது திருமணம் சென்னை,  கிழக்கு தாம்பரம், மீனாட்சி கல்யாண மண்டபத்தில் 07 . 11 . 2011   அன்று சிறப்பாக நடை பெற்றது.

திருமண வரவேற்பு கோவில்பட்டியில் செல்வம் கல்யாண மகாலில் 09.11.2011 அன்று சிறப்பாக நடைபெற்றது.
                              
  நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                          திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் போது எடுக்கப்பட்ட சில படங்கள்,  கலந்து கொள்ள முடியாதவர்களின்  பார்வைக்காக இத் தளத்தில்  தொகுக்கப் பட்டுள்ளன. 

புது டில்லியிலிருந்து திரு ராஜ்குமார் அவர்கள் இச்செய்தி மற்றும் படங்களைத் தொகுத்து அளித்துள்ளார்கள்.

திருமண விழா

கோவை, கவுண்டம்பாளையம் தெய்வத்திரு அருணாச்சலம் பிள்ளை - திருமதி எ.பத்மாவதி மற்றும் செல்வமருதூர் தெய்வத்திரு கே.விஸ்வநாத பிள்ளை - திருமதி வி.சண்முகாம்பாள் ஆகியோரது பேத்தியும் கருர் திரு.அ.ராஜா - திருமதி வி.அலமேலுமங்கை அவர்களின் புதல்வி செல்வி ரா.பத்மப்ரியா M.S.(Bits, Pilani) க்கும் சிதம்பரம் தெய்வத்திரு வெங்கடாசலம் பிள்ளை - தெய்வத்திரு சேவல்கொடி மற்றும் சீர்காழி தெய்வத்திரு சுப்பிரமணிய பிள்ளை - தெய்வத்திரு அலமேலு ஆகியோரது பேரனும், திரு வி.சரவணன் - திருமதி எஸ்.திலகவதி அவர்களின் குமாரன் எஸ். கார்த்திகேயன் பி.ஈ. க்கும் 31.10.2011 அன்று கோவை, மருதமலை அடிவாரம், பொதிகை மஹாலில்   திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சி  05.11.2011 அன்று சிதம்பரம், வடத்தெரு, ராயல் மஹாலிலும் சிறப்பாக நடைபெற்றது.

கோவையிலிருந்து திரு M.R.S.
அவர்கள் 

Sunday, November 13, 2011

திருநெல்வேலி OPS வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்க ஆண்டறிக்கை


திருநெல்வேலி திரு செந்தூர் நாதன் அவர்கள் இந்த ஆண்டறிக்கையை அனுப்பியுள்ளார்கள்.  இந்த ஆண்டறிக்கை PDF File format -ல் உள்ளது . மேலும் password மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் e -mail  மூலம் opsvellalar@gmail.com  -  ஐ தொடர்பு கொள்ளவும். 
Download Link:  http://www.sendspace.com/file/zgrw2k

Saturday, November 12, 2011

திருமண விழா

வடகரை தெய்வத்திரு தெய்வநாயகம்பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் தெய்வத்திரு எதிராஜ் பிள்ளை ஆகியோரின் பேத்தியும் , கோவில்பட்டி ஜோதிநகர் திரு சங்கர் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி 
S.கீதா  
செமப்புதூர் தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை, கோவில்பட்டி தெய்வத்திரு பாலசுப்ரமணிய பிள்ளை ஆகியோரின் பேரனும் கோவில்பட்டி S.K.முருகன் பிள்ளை அவர்கள் மகன் திருவளர் செல்வன் 
M.சம்பத் குமார்  
இவர்களது திருமண வைபவம் கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி  திருமண மண்டபத்தில் வைத்து 07.11.2011  அன்று சிறப்பாக நடைபெற்றது.

 நிகழ்ச்சியில்  உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவை சங்க செய்தி


கோவை N.சண்முகசுந்தரத்தின் புதல்வன் விகாஸ் நாராயணன் மருத்துவ செலவுக்கு அமெரிக்கா டாக்டர் திரு மகிழ் மாறன் சகோதரி டாக்டர் சந்தோஷ் குமாரி செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் அவர்கள் மூலம் கோவை சங்க செயலருக்கு 500 டாலர் (ரூ 24119) அனுப்பியுள்ளார்கள்.

அதை 06.11.11 அன்று கோவை சங்க கூட்டத்தில் சண்முகசுந்தரம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. 

டாக்டர் சந்தோஷ் குமாரி அவர்களுக்கும் திரு அனந்த கண்ணபிரான் அவர்களுக்கும் கோவை சங்கத் தலைவர் , செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்கள். 

இதுவரை மருத்துவ செலவுக்காக சங்கம் மூலமாக ரூ 66169/- கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வன் விகாஸ் நாராயணன் நன்கு குணமடைந்து வருகிறார். விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறோம்.

P.கல்யாணசுந்தரம்                                                           M.R.திருவடி 
தலைவர்                                                                                செயலர் 

தகவல் தெரிவிப்பவர் கோவையிலிருந்து M.R.திருவடி அவர்கள்.  
 

மகளிர்க்கான திறமைகள் :

வணக்கம் ,

எனது சித்தி கோவில்பட்டி ,திருமதி.கிருஷ்ணமாள் வீரசுந்தரம் 
 
 
 
வரைந்த ரங்கோலி கோலம் ,
 
 
 
 
இதில் ஆறு படங்கள் மறைமுகமாக இருப்பதாக கூறியுள்ளார்  கண்டு பிடியுங்கள் ....

கார்த்திக் சங்கர் ,கோவில்பட்டி ,

Friday, November 11, 2011

மகளிர்க்கான திறமைகள் :

வணக்கம்,

மகளிர்க்கான திறமைகள் :
 
இதில் முதலாவதாக எனது பெரியம்மா, மதுரை திருமதி.முத்து அருணாசலம் அவர்களின் ரங்கோலி கோலம் இடம்பெற விழைகிறேன்.இது போன்று உங்களது திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டுகிறேன். 

கார்த்தி சங்கர் , கோவில்பட்டி 
 இந்தக் கோலம் பற்றி திருமதி முத்து அருணாசலம் அலைபேசி வழியாக கூறும் பொழுது,  தான் இக்கோலத்தினை உப்பும் சிறு வண்ணத் தூள்களையும் கலந்து வரைந்ததாகக் குறிப்பிட்டார். அவரிடமிருந்து இன்னும் பல கலை நயம் மிக்க கோலங்களை எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்.

Wednesday, November 9, 2011

இதைத்தான் எதிர்பார்த்தோம்..

இன்று (09.11.2011) திரு கார்த்தி சங்கர் அவர்கள் ஒரு விழாவில் சந்தித்த பொழுது, நமது உறுப்பினர்கள் தங்களது படைப்புகளை (கவிதை, கட்டுரை, வரைபடங்கள் , PHOTOS , ETC.,) இந்த BLOG-ல் வெளியிடலாமா? என கேட்டார். 

இந்த  வெப் சைட்  ஆரம்பத்ததின் நோக்கமே நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடின்றி , எல்லா INFORMATION ம், உடனுக்கு உடன் சென்று அடைய வேண்டும் என்பதும், மற்றும் நம் OPS குடும்பத்தினரின் திறமைகளை வெளிகொணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். கட்டுரைப் போட்டி இத் தளத்தில் நடத்தப்பட்டதின் நோக்கமும் அதுதான்.

எனவே முன்னரே கேட்டுக்கொண்டதுபோல் யார் வேண்டுமானாலும் அவர்களது படைப்புகளை எந்த மொழியிலும் இந்த இணைய தள E-MAIL ID க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அவை இத் தளத்தில் வெளியிடப்படும். அனுப்புவதில் சந்தேகம், சிரமம் இருப்பின் எனக்கு MOBILE மூலம் தெரியப்படுத்தவும். 

நமது இணையத்தளத்தினை மேம்படுத்த யோசனைகளையும் வரவேற்கிறேன்.  ஏற்கனவே புது டில்லியிலிருந்து மரியாதைக்குரிய திரு ராஜ்குமார் அவர்கள் நமக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி செய்திகளை எளிய முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அவர்கள் தரும் செய்திகள் அனைத்தும் அரிதாகும். அதனை நாம் அனைவரும் சரியான நேரத்தில் , சரியான முறையில் உபயோகித்து பயனடைய வேண்டுகிறேன்.

நம் தளத்தில் தற்போது E-MAIL ALERT SYSTEM அறிமுகப்படுத்தபட்டுள்ளது . (இதில் பதிவு செய்பவர்களுக்கு, ஏதேனும் புதிய செய்திகள் இத்தளத்தில் இடம்பெற்றால் உடனே அதன் சாராம்சம் அவர்களுக்கு EMAIL மூலம் அனுப்பப்படும்).  அதே போல் SMS ALERT சிஸ்டம்-ம் விரைவில் இடம் பெற இருக்கிறது. இது போல் ஏதேனும் IDEAS இருந்தால் அதனை வரவேற்கிறேன்.
நன்றி.

நெல்லையப்பன், கோவில்பட்டி


Monday, November 7, 2011

B.R.பாடகலிங்கம் - கோதை தம்பதியினரின் 50 வது திருமண விழா

பிரம்மதேசம் திரு B.R.பாடகலிங்கம் - கோதை தம்பதியினரின் 50  வது  திருமண விழாவை 02.11.2011 அன்று உடுமலைபேட்டை ஜீவா நகர் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள். அதுசமயம் 100 முதியோர்களுக்கு அன்னதானம் செய்தார்கள். விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விழ ஏற்பாடுகளை  P.R.S.மணி-காந்தி, P.ராமனுஜம் - ரமா, லெட்சுமி - கணபதி  @ குகன் , ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.
கோவில்பட்டி OPS சங்கம் விழா தம்பதியினரை வாழ்த்துகிறது.

Sunday, November 6, 2011

போஸ்டல் திரு G.கள்ளபிரான் - கோமதி தம்பதியினரின் 50 வது திருமண விழா

திருநெல்வேலி போஸ்டல் திரு G.கள்ளபிரான் - கோமதி தம்பதியினரின் 50 வது திருமண விழாவினை  02.11.2011 புதன் அன்று திருச்சியில் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள். 
ஸ்ரீ ரங்கம், திருவானைக்கோவில் , சமயபுரம், குணசீலம் கோவில்களுக்கு சிற்றுந்து ஏற்பாடு செய்து சென்று தரிசித்து வந்தார்கள்.
விழா ஏற்பாடுகளை புதல்வர்கள் திரு சங்கரசுப்ரமணியன்-கோமதி , ஞானதேசிகன் - லலிதா, திருவேங்கடராமனுஜம் - தெய்வநாயகி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விழா தம்பதியினரை சங்கம் வாழ்த்துகிறது.