' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Sunday, July 31, 2011

மாதாந்திரக் கூட்டம்

கோவில்பட்டி சங்க ஜூலை மாதக் கூட்டம் 16.07.2011 அன்று திரு நெல்லையப்பன் அவர்கள் வீட்டில் வைத்து செல்வி ராஜலக்ஷ்மி (எ) விசாஹினி , செல்வி தேவிகா (எ) ஹரிணி அவர்களின் இறை வணக்கத்துடன் தலைவர் திரு தேவர்பிரான் தலைமையில் நடைபெற்றது.

வருகை தந்த அனைவரையும் நெல்லையப்பன் அவர்களின் தந்தை திரு லட்சுமணன் அவர்கள் வரவேற்றார்கள்.

இணைய தளத்தில் "Scientific Ideas for Today's Life" தலைப்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
1 . கோவில்பட்டி நெல்லையப்பன் - சூடி தமபதியினரின் புதல்வி செல்வி ராஜலக்ஷ்மி (எ) விசாஹினி (7 th Std) 

2 . உடுமலைபேட்டை ராமானுஜம் - ரமா தமபதியினரின் புதல்வன் செல்வன் பவித்திரன் (+1)

3. திருச்சி ஞானதேசிகன் - லலிதா தமபதியினரின்  புதல்வி செல்வி சாருமதி (8th Std)  

4. சவுதி ரியாத் சங்கரசுப்ரமணியன் - கோமதி தமபதியினரின் புதல்வன் செல்வன் S.G.சஞ்சய்  (8th) 

5. கோவில்பட்டி கிருஷ்ணகுமார் - புவனா தமபதியினரின் புதல்வி செல்வி மாரிவாணி (+2 ) 

6 . கோவில்பட்டி வீரசுந்தரம் - கிருஷ்ணம்மாள் தமபதியினரின் புதல்வன் செல்வன் வெங்கடேஷ் பாரதி (10th )
7 . கோவில்பட்டி நித்யானந்தம் - வேதகலா தமபதியினரின்புதல்வி நீலவேணி (எ) ரேணுகா கலந்து கொண்டார்கள்.

 கலந்து கொண்ட மாணவர்களில் செல்வன் பவித்திரன் முதல் பரிசினையும் , செல்வி சாருமதி இரண்டாம் பரிசினையும் செல்வி ராஜலக்ஷ்மி (எ) விசாஹினி மூன்றாம் பரிசினையும் பெற்றுள்ளார்கள். 

வாழ்த்துக்கள்.

பரிசு பெற்றவர்களுக்கும் , கலந்து கொண்ட அனைவருக்கும் திரு நெல்லையப்பன் அவர்கள் , அவர்களின் தாயார் தெய்வ திருமதி ராமசுந்தரம் அவர்களின் நினைவாக பரிசுகள் வழங்கினார்கள்.
 மேலும் புது டெல்லி திரு ராஜ குமார் அவர்கள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அனுப்பியிருந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது . 

மேலும் மாதாந்திரக் கூட்டச் செய்திகள் தொடரும் ...
கட்டுரைபோட்டி செய்திகள் தனியே இடம்பெறும். ...
இரு இடைவெளியினை பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன் ... 


Thursday, July 21, 2011

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

M.R.S.(M Ramasubramanian அவர்கள் அளிக்கும் வேண்டுகோள் )

வணக்கம். தங்களது இல்லத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத நல்ல நிலையில் உள்ள பர்னிச்சர்கள் மற்றும் பழைய பாத்திரங்கள் இருப்பின், அதனை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம் நிவாரணப் பணிக்கு கொடுத்து உதவ வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஸ்ரீ ஸாரதா ஆஸ்ரமம்,  விவேகானந்தா நகர்,  நியு எடைக்கல்,
உளுந்தூர்பேட்டை - 606 107.தொலைபேசி +91 - 4149 - 220432;

மொபைல்: 94874 81452, 94874 75432, 94431 26432
 
மின் அஞ்சல்: ஆஸ்ரம்@ஸ்ரீசாரதாஆஸ்ரம்.ஓஆர்ஜி

ஆன்லைன் டிரான்ஸ்வர் விபரங்கள்:


வங்கி பெயர் ஐ சி ஐ சி ஐ விழுப்புரம் கிளை

வங்கி கணக்கு எண் 621 301 060 448
வங்கி கணக்கு பெயர் ஸ்ரீ ராமகிருஷ்ன சாரதா டிரஸ்ட்
ஐ எஃப ஸ் சி கோடு ஐ சி ஐ சி 0006213

அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80ஜி வருமான வரிவிலக்கு உண்டு.

தங்களின் நன்கொடைகளை ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் வங்கியில் செலுத்தும் அன்பர்கள், அனுப்பியவுடன் அதுபற்றிய முழு விவரம் மின்னஞ்சல், கடிதம் அல்லது தொலைபேசி மூலமாகத் தெரிவிக்க வேண்டும். இது பல சிரமங்களைத் தவிர்க்க உதவும்.

தகவல் அளித்த ஏட்டின் பெயர்: ஸ்ரீ சாரதா யக்ஞ பிரசாதம், ஜுன், 2011 இதழ்

Regards
M.R.S.
m.ramasubramanian

OPS Student got the seat in Jeppiyar Engg College

tPut ey;Y}H nja;tj;jpU ,uh.ke;jpu %Hj;jp kw;Wk; jpUkjp k.rz;Kfj;jk;khs; MfpNahhpd; NguDk; kzpKj;jhW Police Dispensary Pharmacist jpU k.Kj;Jf;FkhH jpUkjp Njtp MfpNahhpd; %j;j Gjy;tDkhfpa nry;td; K.ke;jpu %Hj;jp fle;j Vg;uy; 2011 y; D.M.E y; (nkf;fhdpf;fy; gl;la NjHT) ele;j NjHtpy; rpwg;G Kjy; tFg;G (Super First Class) ngw;W NjHr;rp ngw;Ws;shH.
NkYk; mtH 20-07-2011 y; fhiuf;Fbapy; ele;j fye;jha;tpy; (Counseling) nrd;id N[g;gpahH nghwpapay; fy;Y}hpapy;  Aeronautical gphptpy; gl;lk; (B.E) gapy NjHT nra;ag;gl;Ls;shH.

jfty;
k.Kj;Jf;FkhH
tPutey;Y}H-627426
Cell No  94867 87561

Comments on "பத்ராசலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்":

Images and Videos of sri seetha ramachandra swamy temple is nice.....
I think Mr.Rajkumar is the first one to upload the videos...
THANKS to him...


-V.Krishna Kumar & Family

Wednesday, July 20, 2011

Tuesday, July 19, 2011

பத்ராசலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்

 பத்ராசலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்
        (ஆந்திரா மாநிலம் )
                               கடந்த வாரம் ஹைதராபாத் சென்ற போது, 'பத்ராசலம்'  ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி  கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்'  என்ற,-  எனது  நீண்ட நாள் விருப்பத்தை  நனவாக்க முடிந்தது.  அந்த அனுபவம், மற்றும் அந்த கோவிலின் சிறப்பு,  மற்ற விவரங்களை இத்தளத்தின் பார்வையாளர்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
                             தெலுங்கானா பிராந்தியத்தில், கோதாவரி நதி கரையில் அமைந்த மிக அமைதியான, பழமையான, ஒரு கோவில் இது. பழைய இதிகாசங்கள் படி,  இந்த கோவில், இராமாயண கால வரலாரையும்,  இங்குள்ள பகுதிகள், இராமாயணகால 'தண்டகாரண்யா'  காட்டையும் நினைவு படுத்துவதாக இன்றும் நம்ப படுகிறது.
.   இந்த பகுதியில்தான், இராமர், தனது துணைவி சீதா, மற்றும் இளையோன் இலக்குவன் உடன்,  வனவாசம் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.  பொன் மான்,வேடத்தில் மாரீசன் இந்த கானகத்தில் தோன்றி, இராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட இடம் என்று கருதும் இடமான  'பர்னசாலா' இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது.   இந்த கோவில் இருக்கும் மலைமீதுதான்,  இராம அவதாரத்திற்கு பிறகு,  மகா விஷ்ணு,  ஏற்கனவே கொடுத்த வரப்படி,  பகவான்  ராமச்சந்திர மூர்த்தியின் அருளை வேண்டி பல யுகங்கள் தவம் செய்த அன்பர் 'பத்ரன்'  க்கு மனமிரங்கி  இராமனாக தோன்றி காட்சி அளித்ததாகவும் செய்தி,.
                               இந்தக்கோவில் பக்த ராமதாசால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அன்றைய நவாபின் அனுமதி இல்லாமல், அரசாங்க பணத்தை கோவில் நிறுவ பயன்படுத்தியதற்காக பக்த ராமதாஸ் பனிர்ரெண்டு ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். இந்த சிறை நாட்களில் தான், பக்த
ராமதாசின்,  மிக பிரசித்தி பெற்ற  'தசரதி சதகம்', ' ராம கீர்த்தனை'கள் இயற்றப்பட்டன. பக்தனின் கஷ்டத்திற்கு மனமிரங்கி, இறைவன் ராமர்,  தனது
தம்பி இலக்குவனுடன்;   -' ராமோஜி , லக்மொஜி' -  வேடத்தில் சென்று அரசாங்க பணத்தை ராமதாசின் சேவகர் களாக திருப்பி செலுத்திய வரலாறு  இந்தகோவிலுக்கு உண்டு. இறைவனின் மகிமயை  உணர்ந்த நவாப்,  பணத்தை வாங்காமல், இறைவனின் திருவிளையாடலை உணர்ந்து ,   இரு 'மோகர்'  நாணயம் மட்டும் , கடவுளருள் நினைவாக எடுத்துக்கொண்டார் என்பது கடந்தகால வரலாறு. அந்த நாணயம் இன்றும் இந்த கோவில் தேவஸ்தானத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
                           நீண்ட நாட்களுக்கு பிறகு, மக்கள் நெருக்கம், ஆரவாரம் இல்லாத, சுப்ரபாதம் சேவையை,  ,அதி காலை நாலரை மணிக்கு,  மூலவர் சன்னதியில், பார்த்து அனுபவித்த மன நிறைவு,  சமீப காலங்களில்,  வேறு எங்கும்  நான் அனுபவித்ததாக எனக்கு நினைவில்லை. அதை விட பெருமகிழ்ச்சி என்னவென்றால், காலை திருவ்னந்தால் போது கேட்ட திருப்பாவை- சாத்துமுறை, இரவு ஏகாந்த சேவை நேரத்தில் கேட்ட திவ்ய பிரபந்தமும் - பல்லாண்டு,பல்லாண்டு - கேட்ட அனுபவம் மறக்க முடியாத ஒன்று.


                           இத்தகைய அனுபவங்கள், என்னுடைய கல்லூரி நாட்களில் படித்த,   பேரறிஞர் ரஸ்ஸல் எழுதிய கட்டுரயின் கீழ்க்கண்ட வார்த்தைகளை நினைவு படுத்துகின்றன .

                                                     Is Happiness Still Possible?      Yes!!!
                           நீங்களும் அனுபவிக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் இத்துடன் சில ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ பகுதிகள்தொகுகப்பட்டுள்ளன.

(Source/ References  -   Devastanam site/other web resources)


 ஸ்ரீ. கா. ந . இராஜகுமார் , புது டெல்லி.
rkocc@yahoo.com


 ஆடியோ, வீடியோ கீழே
You tube link about this temple

Greetings to Manibarathi

Congrats Bharathi!

Set your goals ahead for National & International titles.

With Best Wishes,
Rajakumar, New Delhi.

Monday, July 18, 2011

Comments on Devarpiran Krishnan's suggestion

Dear Devarpiran Krishnan,
I noticed the VALAIKAPPU news about your wife, our hearty wishes you and your wife. And I come to know that you are a young Entrepreneur who presented your project plans in the OPS Meeting held in Chennai a year ago. We are so proud to have such a Tamil patriotic youngsters like you in our community. Those comments are million dollar worth comments.

But, people like me are not that good in computers especially to type in Tamil, that’s why English comments were received. Secondly, those who can post their article in computer will definitively have the basic English knowledge to understand our comments (as we are not using a literary English)

As a well wisher of our community youngsters, I really appreciate your boldness to present your thoughts but please look at the other side of the coin before you comment on something which good for your future.

Our best wishes for your bright future. 

This post has been received w/o quoting the name. Please include your name and place so that all shall know.

Greetings to Manibarathi

congradualation Bharathi.
k.t.ramanujam walajabad

Sunday, July 17, 2011

வளைகாப்பு

திருநெல்வேலி காமாட்சி அம்மன் நகர் திரு R.கிருஷ்ணன் - திருமதி பிரபா தம்பதியினரின் மருமகளும்,  திரு K.தேவர்பிரான் அவர்களின் மனைவியும்,  சென்னை திரு ஆழ்வாரப்பன் திருமதி பானு தம்பதியனரின் புதல்வியுமாகிய திருமதி சத்யாவிற்கு 10.07.2011 அன்று சென்னையில் வைத்து வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது.

சதுரங்கப் போட்டியில் மணிபாரதி சாதனை

கோவை கணபதி என்ற குகன் - மகாலட்சுமி தம்பதியனரின் மகன் செல்வன் G . மணிபாரதி (வயது 13 ) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வைத்து நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளார்.
அவருக்கு கோவில்பட்டி சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Comments

 தேவர்பிரான் கிருஷ்ணன், சென்னையிலிருந்து    (devarpirankrishnan@gmail.com)
           நமது உறவினர்கள் அனைவரும் தமிழர்கள்.  ஆனால் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் ஆங்கிலத்தையே பயன்படுத்துவது ஏன் என்று புரியவில்லை! (செய்தி மலரில் கூட சில பக்கங்கள் ஆங்கிலத்தில் வருகின்றன..!!) 100 % ஆங்கில அறிவு நம் சமூகம் பெற்றுவிட்டதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைகளை பதிவிட்ட சிலருக்கு வாழ்த்துக்கள் கூட ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. வாழ்த்திய உள்ளத்தை வரவேற்கலாம். ஆனால் கட்டுரை எழுதியவர்க்கே அவ்வாழ்த்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி முழுமையாக புரிந்திருக்குமா என்பது சந்தேகமே!  சிந்தித்துப் பார்க்கலாமே..!!

Friday, July 15, 2011

COMMENTS

VERY, VERY GLAD TO SEE A WEB-SITE FOR OUR OPS RELATIVES WHICH IS HELD TOGETHER IN STRONG BONDAGE FROM THE DAYS OF MY CHILD-HOOD WHEN EVERY ONE WAS KNOWN TO EACH OTHER DUE TO LESS NUMBERS AND SHORT DISTANCE. KINDLY ACCEPT MY SINCERE THANKS AS U HAVE MADE IT CONVENIENT FOR ALL RELATIVES TO UNITE TOGETHER ,CROSSING THE BORDERS OF SEVERAL COUNTRIES AND OCEANS .TRUST THERE COULD BE NO COMPLAINTS OF FACTORS OF COST AND TIME ANYMORE. ALSO MY THANKS TO TRK ANNAN  FOR THE TIMELY ASSISTANCE ENHANCED FROM WHERE EVER HE IS. PRAY FOR HIS GOOD HEALTH
BEST WISHES TO ONE AND ALL,
S.KANDAPPAN.

Comments on "ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவில்,சேரன்மகாதேவி":

கட்டுரையும், படங்களும் அருமை. காலத்தின் வேகத்தில் இணையதளம் என்பது கட்டாய தேவை. கட்டுரைகள், நிகழ்வுகள் போன்றவற்றை வலைப்பூவில் ஏற்றியவுடன் அதன் தலைப்புகள் (ஆசிரியரின் பெயருடன்) குருஞ்செய்தியாக செல்பேசிக்கு அனுப்பினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் :) கோவில்பட்டி சங்க முயற்சியை பாராட்டுகிறேன். மற்ற சங்கங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்..!!

devarpirankrishnan@gmail.com

Monday, July 11, 2011

Comments

வலைத்தளத்தில் நீங்கள் கொடுத்து உள்ள செய்திகளையும் பட தொகுப்புகளையும் கண்டு மகிழ்ந்தேன். தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

நன்றி !!

மேனகா சொக்கலிங்கம் ... சென்னை

Saturday, July 9, 2011

COMMENTS

I came to know our website through our seithi malar. Really I am very happy to introduce this type of advanced technology to ours. I convey my best  wishes and periodical growth of our association.
regards,
S.Vallinayagam, S/o.D.Sadagopanambi , Chennai - 56

Free e-mail alert

e-mail மூலம் இந்த வலைத்தள பதிவுகளை பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளவும்.

Friday, July 8, 2011

OBC Status for OPS?

tn.G.O. MSNOI00:B.C.&Mbc dtd 2-11-97 

ACCORDING TO THE ABOVE  G.O. VIDE SERIAL NO.90 OPS VELLALAR  IS NOTIFIED AS B.C.  HAS THIS NOTIFICATION HAS BEEN  ENABLING OUR STUDENTS TO ENJOY B.C. STATUS   IN THE CENTRAL GOVT. DEPTS?  ANY INFORMATION IN RESPECT OF THE ABOVE WILL ASSIST OUR SONS AND DAUGHTERS AS  MANY OF US ARE NOT AWARE OF THE PRESENT POSITION.

  S.KANDAPPAN

Comments on "ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவில்,சேரன்மகாதேவி":

Sri Appan Vengatachalapathi kovil photo and article are nice. 

D.Deivu,Walajapet

Thursday, July 7, 2011

Comments on "ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவில்,சேரன்மகாதேவி":

"ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவில்,சேரன்மகாதேவி":
It is a welcome effort to know the less visited but old well cherished temples. Our land, known as 'Land of Temples' has many such wonderful temples which are little known/least visited.
The OPS family & the members endowed with a life style, based on religious faith, visit often various temples. I am sure, many such reporting from our members, including about their family temples/ deities, 'Kula Theivams' etc. may add to the viewers delight and enrich their mind & soul.
My sincere thanks to Mrs Meena Devarpiran for her effort & wish her to report more such visits.

Rajakumar, New Delhi.

Wednesday, July 6, 2011

மனமார்ந்த நன்றி

ஜூலை 2011 செய்தி மலர் இதழில் இந்த  வலைத்தளத்தைப் பற்றி அறிமுகச் செய்தி வெளிவந்துள்ளது. இதன் மூலம் செய்தி மலர் வாசிக்கும் அனைவரும் இந்த வலைத்தளத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், மேலும் உபயோகித்துக்கொள்ளவும் ஒரு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி OPS  சங்கம், செய்தி மலர் ஆசிரியர் குழுவினருக்கும் கூட்டமைப்பிற்கும் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. 

Wishes from Tirunelveli

ON SEEING THE NEWS IN OUR " OPS SEITHI MALAR, JULY 2011" ABOUT THE WEBSITE, I CONGRATULATE THE OFFICE BEARERS OF OPS SANGAM,KOILPATTI, FOR THEIR SINCERE EFFORTS, AND I WISH ALL SUCCESS IN THE YEARS TO COME . L.CHENDURNATHAN, TIRUNELVELI-11

Wishes for the Function

Wishes for "திருமண உறுதி தாம்பூல வைபவம்": at Chennai:
SEEN THE MESSAGES AND THE PHOTOS, "VERY NICE". THANKS . WISH ALL THE CONCERNS " A VERY HAPPY AND LONG LIFE "
L.CHENDURNATHAN, TIRUNELVELI-11  

Comments

எல்லோருக்கும் பயன் தரக்கூடிய இனைய தளத்தை உருவாக்கிய திரு.நெல்லையப்பனுக்கு என் சார்பாகவும் கோவை வாழ் ஓ.ப.சி. உறுப்பிணர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வனக்கம். இது மேலும் மேலும் வளர்ந்து உறுப்பினர்களுக்கு  பல ந்ன்மைகளை ஏற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Ramasubramanian, Kovai 

ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவில்,சேரன்மகாதேவி

 மணம் கமழும் பொதிகை தென்றலும், தாமிரபரணி ஆறும் சூழ்ந்த சேரன்மகாதேவியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. ஆற்றங்கரையோரம் பசுமையான வயல் வெளி சூழ அழகாக வடிவமைக்கப்பட்ட கோவிலில் பெருமாள் தனி சந்நிதியிலும் , இரு தாயார்கள்  தனி தனி சந்நிதியிலும் இருந்து அருள் மழை பொழிகிறார்கள். சிறிய திருவடியாம் ஆஞ்சநேயர் தனியே அழகுற இருப்பது எப்பொழுதும் "ராம் ராம் " என்று சொல்வது போலவே உள்ளது. பெருமாள் திருமலை திருப்பதி போலவே சிறிய வடிவில் கண்ணைக் கவரும் அழகில் ஜொலிக்கிறார். 140 வருடங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி இருந்த இக்கோவிலை இந்த ஊர்க் காரர்கள் சிரமமெடுத்து தற்சமயம் திருப்பணிகள் செய்து மஹா  சம்ப்ரோசணம் நடத்தி உள்ளார்கள். நமது உறவினர் எனது கொழுந்தனார் சேரன்மகாதேவி திரு மந்திரமூர்த்தி (Indian Bank) அவர்கள் எங்களுடன் வந்திருந்து கோவிலின் சிறப்புகளை எடுத்துரைத்தார்கள். கோவிலில் எடுத்த சில PHOTOS கோவிலின் அழகினை எப்பொழுதும் காண அழைக்கின்றன. நீங்களும் ஒரு முறை இக்கோவிலுக்கு சென்று ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதியின் அருள் பெற்று வாருங்களேன். 

மீனா தேவர்பிரான், நாலாட்டின்புத்தூர். 

Monday, July 4, 2011

கட்டுரைப் போட்டி நிலவரம்

இந்த வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட "SCIENTIFIC IDEAS FOR THE TODAY'S WORLD" கட்டுரைப் போட்டிக்கு  7 OPS மாணவர்கள் தங்களது கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். அவைகள் தனி எண் வழங்கப்பட்டு மூன்று நடுவர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டபின் இத்தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.

Sunday, July 3, 2011

திருமண உறுதி தாம்பூல வைபவம்

ஆலங்கிணறு திரு நா. மாணிக்கவாசகம்பிள்ளை , மதுரை தாசில்தார் தெய்வத்திரு சொக்கலிங்கம்பிள்ளை இவர்களின் பேரனும் , கோவில்பட்டி திரு ஞானதேசிகன் - திருமதி மரகதம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வன் 
சிரஞ்சீவி ஞா .மாணிக்கவாசகம் B.E.,
கோயம்புத்தூர் தெய்வத்திரு சுப்பிரமணியபிள்ளை , விக்கிரமசிங்கபுரம் தெய்வத்திரு கல்யாணசுந்தரம்பிள்ளை இவர்களின் பேத்தியும் சென்னை திரு முத்தையா - வள்ளிமயில் தம்பதியினரின் புதல்வி 
 திருவளர்செல்வி மு . கமல கல்யாணி (எ) மாலினி B.E.,
இவர்களின் திருமண உறுதி தாம்பூல வைபவம்  நிகழும் மங்களகரமான 1186 ம் ஆண்டு , ஸ்ரீ கர வருடம் ஆனி மாதம் 4 ம் தேதி (19 .06 .2011) ஞாயிறன்று சதுர்த்தி திதியும் திருவோண நட்சத்திரமும் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சென்னை குரோம்பேட்டை அடையாறு ஆனந்தபவன் ஸ்ரீ சப்தகிரி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது  என புது டில்லி திரு ராஜகுமார் (விட்டல்) அவர்கள் தெரிவித்து, சில போட்டோக்களையும் அனுப்பியுள்ளார்கள். 
போட்டோக்கள் கீழே

 










Friday, July 1, 2011

Forwarded News

அன்புடையீர்
வணக்கம்
சைவ பெருமக்கள் பேரவை 51 ஆம் ஆண்டு விழா நடக்க இருப்பதால் அனைவரும் நமது சமுக  மக்களை அழைத்து வரும் படி வேண்டுகிறோம் ..
இந்த அழைப்பை நீங்கள் பத்து பேருக்கு ஈமெயில் மூலம் அனுப்ப வேண்டுகிறோம்
அன்புடன்
சைவ பெருமக்கள் பேரவை
கோயம்புத்தூர்.



The blog thanks  Shri Anandakannabiran for forwarduing this invitation