' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Tuesday, March 5, 2013

கோவை ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்க பொதுக் குழு கூட்டம்

கோவை பொது நல சேம நிதி 292வது கூட்டமும், ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்க பொதுக் குழு கூட்டமும் 24/02/2013 ஞாயிறு ம்தியம் 3 மணிக்கு திருமதி எஸ்.கே. சுப்புலட்சுமி மற்றும் திரு ஜெ.அருணாசலம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
துணைத் தலைவர் திரு எஸ்.ஈஸ்வரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் திரு.உ.மீனாட்சிசுந்தரம் அவர்களால் இறை வணக்கம் பாட, திரு.ஜெ.அருணாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கோவை சங்கத்தின் சங்க தலைவர் திரு.பா.கல்யாணசுந்தரம், கோவைபுதூர் திருமதி மீனா சுப்பிரமணியம், தூத்துக்குடி திரு.எஸ்.கோமதிநாயகம் ஆகியோரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது.

மறைந்த தலைவர் சேவையையும், அருங்குணங்களையும், திரு எஸ்.வெங்கட்ராமன் மற்றும் திரு எஸ்.கந்தப்பன் ஆகியோர் நினைவு கூர்ந்து அதனை பாராட்டி பேசினார்கள்.

சென்ற மாத அறிக்கை செயலாளர் அவர்களால் வாசிக்கப்பட்டது. கடந்த கூட்டத்திலிருந்து இந்த கூட்டம் வரை இரு அமைப்புகளிலும் ஏற்பட்ட வரவு செலவு விபரத்தினை பொருளாளர் திரு எம்.ஆர். ஆழ்வாரப்பன் சார்பாக பொது செயலாளரால் வாசிக்கப்பட்டு கரகோஷ்த்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முன்னாள் சங்க பொது செயலாளர் மற்றும் மூத்த உறுப்பினருமான திரு எஸ்.கந்தப்பன் அவர்கள் தமது பெற்றோர் நினைவாக ரூபாய் ஐந்தாயிரத்திற்கு கல்வி டிரஸ்டு ஏற்படுத்தியமைக்கு நன்றி செலுத்தப்பட்டது.

அடுத்து தலைவர் பத்விக்கு திரு எஸ்.ஈஸ்வரன் அவர்கள் பெயரை பொது செயலாளர் முன்மொழிய, அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

துணைத் தலைவராக திரு தோ.சாத்தூரப்பன் அவர்களை திரு எஸ்.ஈஸ்வரன் முன்மொழிய, அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. செயற் குழு உறுப்பினராக திருமதி மீனா சண்முகம் அவர்களை திரு எம்.ஆர்.திருவடி முன்மொழிய அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முந்தைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பொது நல சேம நிதி பொன் விழா அறக்கட்டளை விரைவில் துவங்கிட மற்றும் பதிவு செய்திட பொதுக்குழுவால் தீர்மாணிக்கப்பட்டது. பொதுக்குழு விழா அறக்கட்டளை உறுப்பினர் சந்தா ரூபாய் ஐந்நூறு என தீர்மானிக்கப்பட்டது.

பொன்விழா அறக்கட்டளை உறுப்பினர்களை பொதுக்குழு தேர்வு செய்து ஏகமனதாக கீழ்கண்டவர்களை தேர்வு செய்தது.

திரு.அனந்த கண்ணபிரான், பேராசிரியர் இ. வள்ளிநாயகம், திரு தோ. சாத்தூரப்பன், திரு எஸ் கந்தப்பன், திரு எஸ். வெங்கட்ராமன், உ. மீனாட்சிசுந்தரம். எஸ்.எஸ்.மணி (எல்.ஐ.சி. ஏஜெண்டு), எஸ்.ஈஸ்வரன், எம்.ஆர்.திருவடி, ஜி.சங்கரலிங்கம், பி.குமாரநாயகம், ஜெ.அருணாசலம், மலுமிச்சம்பட்டி பி.சண்முகம், கோவைபுதூர் வி.கனேசன், எஸ். சங்கரநாரயணன், ஆ.சீனிவாசன், கே.சுப்பிரமணியன், ஜி. சொக்கலிங்கம், எஸ்.கணபதி, மு.இராமசுப்பிரமணியன்

இது சம்பந்தமாக பொதுக்குழு அடுத்த கூட்டத்திற்குள் பதிவு செய்ய பரிந்துரைத்தது,

வந்திருந்த உறுப்பினர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டதில், அதில் வந்த அதிருஷ்டசாலிகளான த்ரு.ஜி.சங்கரலிங்கம், திரு பி.சண்முகம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக கூட்டம் நடத்த் இடமும், இனிய சிற்றுண்டியம் நல்கிய திருமதி எஸ்.கே.சுப்புலட்சுமி & திரு ஜெ.அருணாசலம் அவர்களுக்கும், அமைதியாக கூட்டம் நடத்திட உறுதுணையாக இருந்த உறுப்பிணர்களுக்கும் திரு.ஜி. சொக்கலிங்கம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

எம்.ஆர்.திருவடி                         எஸ்.ஈஸ்வரன்
பொது செயலாளர்                             
தலைவர்                                               
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Regards
M.R.S.
m.ramasubramanian

No comments:

Post a Comment