கோவை பொது நல சேம நிதி & OPS சங்க பொதுக் குழுக்கூட்டம் 17.07.2011 அன்று வடவள்ளி திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் பேத்தி செல்வி பூஜா இறைவணக்கம் பாடினார். செல்வன் விகாஸ் நாராயணன் மருத்துவக் உதவிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிக்காக திரு M .R திருவடி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திரு ஈஸ்வரன் அவர்கள் வேண்டுகோளின்படி Xth மற்றும் +2 ல் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பெற்றது.
பத்தாம் வகுப்பு முதல் மூன்று இடங்கள்.
1 . பொள்ளாச்சி திரு சற்குருநாதன் பேத்தி திரு சக்தி அருணாசலத்தின் புதல்வி முதல் இடம்.
2 . உடுமலை திரு பாடகலிங்கம்பிள்ளை மற்றும் தலைவர் திரு கல்யாணசுந்தரம் இவர்களின் பேரன் திரு ராமானுஜம் அவர்களின் புதல்வன் செல்வன் பவித்திரன் இரண்டாம் இடம்.
3 . தெய்வத்திரு நடராஜபிள்ளை பேத்தி திரு வீரகுமார் அவர்களின் புதல்வி செல்வி வீரலட்சுமி மூன்றாவது இடம்.
+2 முதல் மூன்று இடங்கள்.
1 . தெய்வத்திரு கோவிந்தம்பிள்ளை அவர்களின் பேத்தி திரு பச்சிராஜன் அவர்கள் புதல்வி செல்வி பச்சியம்மாள் முதல் இடம்.
மேற்கண்ட மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும்.
செய்தி மலர் சங்க செய்திகளை வெளியிட்டு பற்பல உதவிகளுக்கு துணை நிற்பதையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திரு கணபதி அவர்கள் புதல்வன் செல்வன் மணிபாரதி சதுரங்கப் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்றமைக்கு சங்கத்தின் சார்பாக ரூபாய் 251 வழங்கப்பட்டது.
பதவி உயர்வு பெற்று திருச்சியில் பணியாற்றும் தெய்வத்திரு வேலாயுதம் பிள்ளை அவர்கள் புதல்வன் செல்வன் கள்ளபிரான் அவர்களுக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உதவி தலைவர் திரு ஈஸ்வரன் அவர்கள் தான் சென்று வந்த ஆன்மீக சுற்றுலா பற்றி எடுத்துக் கூறினார்கள் . மேலும் ஒரு பக்திப் பாடல் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.
பொருளாளர் திரு ஆழ்வார் அப்பன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
செய்தியளிப்பவர் கோவை தலைவர் திரு கல்யாணசுந்தரம் அவர்கள்.
No comments:
Post a Comment