கோவை
பொதுநல சேம நிதி மற்றும் ஒ.பி.எஸ். சங்க கூட்டம் திருமதி
கே.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் இல்லத்தில் 17.06.2012 அன்று ஞாயிறு காலை
10.30 மணிக்கு நடைபெற்றது.
முதலில் இறைவணக்கம் திரு.எஸ்.எஸ். மணி அவர்களின் மகன் செல்வன் இரங்கநாதன்,
மகள் செல்வி மகாலட்சுமி மற்றும் உபதலைவர் திரு எஸ்.ஈஸ்வரன் அவர்களாலும்
பாடப் பெற்றது,
தலைவர் திரு பி.கல்யாணசுந்தரம் தனது வரவேற்பு உரையில், சிரமம் பாராது
பாடுபட்டு கல்வி அறக்கட்டளை நிறுவ உதவிய பொது செயலாளர் திரு
எம்.ஆர்.திருவடி அவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்
கொண்டார். மேலும் (1) ஈஷா யோக மையம் திரு சி.எஸ்.சாமி-திருமதி கீதா சாமி
அவர்கள் தெய்வத்திரு சொக்கலிங்கம் பிள்ளை-தெய்வத்திருமதி அலமேலு அம்மாள்
பெயரிலும் (2) திரு திரவியன் ராஜப்பா அவர்களின் மருமகன் திரு
ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் தனது துணைவியார் நினைவாக தெய்வத்திருமதி லதா
அவர்களின் பெயரிலும் கல்வி அறக்கட்டளை நிறுவியதற்கு சங்கத்தில் பாராட்டும்
நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது,
காலம் சென்ற (1) திரு என்.சண்முகசுநதரம் புதல்வர் விகாஸ் நாராயாணன் (2)
திரு எஸ்.எஸ்.மணியின் அத்தை திருமதி சிங்கிகுளம் ஆழ்வார் அம்மாள் (3) திரு
கே.லெட்சுமணன அவர்களின் சித்தப்பா திரு லெட்சுமிநாராயணன்
ஆகியோர்களுக்கு 2 ந்மிடம் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.
சென்ற மாத கூட்டறிக்கை செயலாளராலும், வரவு செலவு கணக்கு பொருளாளர் திரு
எம்.ஆர்.ஆழ்வாரப்பன் அவர்களாலும் வாசிக்கப்பட்டு, அது கரகோஷத்துடன்
ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.
2011ல் பொதுநல சேமநிதியின் பொன்விழாவும், ஒ.பி.எஸ்.சங்கவிழாவின் நினைவாக
இன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களுக்கு "டிராவல் பேக்"
கொடுக்கப்பட்டது,
பின்னர் கூட்டத்தில் உடுமலை ஒ.பி.எஸ். தலைவர் திரு.பட்சிராஜன், தெய்வத்திரு
இராமலிங்கம் பிள்ளையின் மாப்பிள்ளை திரு அருணாசலம் அவர்களும் சிறப்பு உரை
ஆற்றினார்கள். மேலும் டாக்டர் வள்ளிநாயகம் அவர்கள் தனது உரையில் இரு
சங்கங்களின் செயல்பாட்டை பாராட்டியதுடன், கோவையில் படிக்கும் மாணவ்,
மாணவிகளுக்காக ஒரு தனியாக கல்வி உதவி குழு அமைக்கலாம் என்றும் ஆலோசனை
கூறினார்.
கூட்டத்தில் மேனாள் உதவி தலைவர் திரு. சாம்பசதாசிவம் பிள்ளை அவர்கள், இரு
சங்ககளும் திறமையாகவும், சிறப்பாகவும் செயல்படுவதை பாராட்டி பேசினார்கள்.
அது போன்றே திரு தோ..சாத்தூரப்பன் அவர்களும் சங்கத்தின்
செயல்பாடுகாளை பாராட்டி பேசினார்கள்.
கோவையில் புதிதாக அமைக்கபட உள்ள கல்வி குழுவிற்கு கீழ்கண்டவர்கள் உறுப்பினர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
(1) டாக்டர் ஈ வள்ளிநாயகம் (2) திரு எஸ்.வெங்கட்ராமன் (3) திரு எஸ்.எஸ்.மணி
(4) திரு ஜி.சங்கரலிங்கம் (5) திரு தோ.சாத்தூரப்பன் (6)
திரு.எம்.ஆர்.திருவடி (7) திரு.எம்.இராமசுப்பிரமணியன்
திரு இரா.ஸ்ரீதரன் புதல்வன் திரு எஸ்.சரவணன் அவர்கள் இளங்களை கணிப்பொறி
மற்றும் 3டி அனிமேஷன் கல்வி பயின்று தற்போது கோவையில் "ஆர்த்தோ 1"
என்னும் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியில் சேர்ந்தமைக்கும், காரமடை
திரு என்.கிருஷ்ணன் புதல்வி செல்வி கி.அருள்செல்வி ஆசிரியர் பயிற்சியில்
தேர்வு பெற்றமைக்கும் சங்கம் தனது பாராட்டுதல்களை தெரிவித்துக்
கொள்கிறது.
கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள் பெயர்களை குலுக்கி போட்டதில் அதில் வந்த
தேர்வு பெற்ற (1) திரு எஸ்.எஸ்.மணி அவர்களின் துணவி திருமதி கிருஷ்ணவேணி
(2) திருமதி சூடாமணி இராமசுப்பிரமணியன் ஆகிய இரு
அதிர்ஷடசாலிகளுக்கு தலா ஒரு எவர்சில்வர் டம்ளர் பரிசாக அளிக்கப்பட்டது.
அடுத்த கூட்டம் திரு எஸ்.எஸ். மணி அவர்கள் இல்லத்தில் 22.07.2012 ஞாயிறு
காலை 10.30 மணி அளவில் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக உதவி செயலாளர் திரு ஜி.சங்கரலிங்கம் அவர்கள் கூட்டத்திறகு
வந்திருநத உறுப்பினர்களுக்கும், கூட்டத்தின் முடிவில் இடம் அளித்து
சிறப்பான மதிய உணவு அளித்து கூட்டம் சிறப்புற நடைபெற உதவிய திருமதி
எஸ்.கே.சுப்புலட்சுமி, திரு அருனாசலம் மற்றும் திருமதி லதா அருனாசலம்
ஆகியோருக்கும் தனது நன்றியினை தெரிவிக்க, கூட்டம் இனிதே முடிவு பெற்றது.
Regards
M.R.S.
m.ramasubramanian