Wednesday, December 28, 2011

இரண்டாம் ஆண்டு விழா

இரண்டாம் ஆண்டு விழா 25.12.2011

கோவில்பட்டி சங்க பொது குழு கூட்டமும் ஆண்டு விழாவும் 25.12.2011 அன்று கோவில்பட்டி சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் வைத்து செல்வி M.லட்சுமி இறை வணக்கத்துடன் காலை 10 மணிக்கு தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் பொதுக்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. செயலாளர் திரு தெய்வநாயகம் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். திரு செண்பகசுந்தரம் அவர்கள் 2011 ம் ஆண்டு வரவு, செலவு வாசித்து மன்ற ஒப்புதல் பெற்றார். நமது சங்க பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்களின் மகள் ஸ்ரீவரமங்கைநாச்சியாரின் கணவர் திரு சீனிவாசன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆண்டு விழா
மதுரை முன்னாள் தலைவர் திரு L.திருவடி அவர்கள் தலைமையில் செல்வி N.விசாஹினி பாரத நாட்டியத்துடன் ஆண்டு விழா ஆரம்பமானது. 
தலைவர் திரு தேவர்பிரான் அனைவரையும் வரவேற்று பேசினார் .
திரு L.திருவடி அவர்கள் சங்க வளர்ச்சி பற்றி பேசினார்கள். 
கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் திரு ல.செந்தூர் நாதன் அவர்கள் 
ஒ. ப. சீ யின் பழக்க வழக்கங்கள் பற்றி விரிவாக விவரித்தார்கள்.  கூட்டமைப்பு உதவி தலைவர் திரு A.பாலசுப்ரமணியன் அவர்கள் கோவில்பட்டி சங்க நடவடிக்கைகள் பற்றி பாராட்டி பேசினார்கள்.  கோவை சங்க தலைவர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள், செயலாளர் M.R.திருவடி அவர்கள், மதுரை சங்க செயலாளர் திரு ச.சுப்பிரமணியன் , விக்கிரமசிங்கபுரம் தலைவி திருமதி சங்கரபார்வதி, திருமதி கல்யாணி அவர்கள் வாழ்த்தி பேசியும், தேவாரம் பாடியும் மகிழ்வித்தார்கள். திரு குருநாதன் அவர்கள் பதவி உயர்வு பெற்றதை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. தலைவர் மற்றும் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக  நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. மதுரை திரு L.திருவடி அவர்கள் விழாவுக்காக ரூ 1000/- வழங்கி கொடுத்து உதவியுள்ளார்கள். அவர்களுக்கு கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டைப்போல் சங்க நிர்வாகிகளைப் பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. 

மதிய உணவிற்குப் பின் பல்சுவை நிகழ்ச்சிகள் திரு பாலசுப்ரமணியன், திரு சுப்ரமணியன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 
திருநெல்வேலி திரு விஸ்வநாதன் - வள்ளி மயில் தம்பதியினரின் புதல்வி செல்வி பூரணி என்ற ராமலட்சுமி யின் பாரத நாட்டியத்துடன் ஆரம்பமானது. செல்வி N.தேவிகா, செல்வன் L.சுரேஷ்  திருக்குறள் ஒப்புவித்தார்கள். 
செல்வி N.தேவிகா , செல்வி N. விசாஹினி ,செல்வி நீலவேணி, செல்வன் முனீஸ் ஆகியோர் பாடல்கள் பாடி இனிமைப்படுத்தினார்கள். 
செல்வன் எஸ்.காந்தி பூவனாதன், செல்வி சூரிய காந்தி, செல்வன் எஸ்.முநீஸ்குமார், செல்வன் எஸ்.பிரமநாயகம், செல்வன் வி.செண்பகசுந்தரம் , செல்வன் வி.வெங்கடேஷ்பாரதி  ஆகியோர் தாங்கள் இயற்றிய கவிதைகளைப் பாடி தமிழ் புலமையினை வெளிப்படுத்தினார்கள். 

தொடரும் ..


No comments:

Post a Comment