Friday, September 23, 2011

செப்டம்பர் மாதக் கூட்டம்

கோவில்பட்டி சங்க செப்டம்பர் மாதக் கூட்டம் 17.09.2011 அன்று திரு கிருஷ்ணகுமார் அவர்கள் இல்லத்தில் , திரு செண்பகசுந்தரம் அவர்களின் இறைவணக்கப் பாடலுடன் , தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . செல்வி செண்பகபிரியா அனைவரையும் வரவேற்றார். 

சங்க நடவடிக்கைகள் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது.

2010 -2011 ம் கல்வி ஆண்டில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் திரு வீரசுந்தரம் - கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் புதல்வன் செல்வன் வெங்கடேஷ் பாரதி , மாணவி திரு பாலகுமார் -மீனா தம்பதியினரின் புதல்வி செல்வி சாரதா ஆகியோரைப் பாராட்டி சங்க உறுப்பினர் திரு சங்கர் அவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் பரிசு வழங்கி கௌரவித்தார்கள். 

இம்மாத அதிர்ஷ்டசாலி  திருமதி கிருஷ்ணம்மாள் அவர்கள்.

திருமதி மீனா அவர்கள் நன்றி உரைக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

No comments:

Post a Comment